டெல்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா புனித நீராட உள்ளார்.

கடந்த 13 ஆம் தேதி சிறப்பாக உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது.  அன்று கங்கை, யமுனை  மற்றும் சரஸ்வதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர்  இந்நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இம்முறை இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்கு இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இன்று உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். தனது பயணத்தில், பூரி சங்கராச்சாரியார் மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் ஆசி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.