டெல்லி

ம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தேர்தல் இரு சித்தாங்களுட்க்கு இடையே ஆன போட்டி எனக் கூறி உள்ளார்.

முதல்வர் அதிஷி தலைமையில் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி நிறுவனரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,

“டெல்லி சட்டசபை தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி. வரி செலுத்துவோரின் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.

தங்களுக்கு நெருக்கமானவர்கள் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை மக்கள் நிதியில் இருந்து தள்ளுபடி செய்யும் பாஜகவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சித்தாந்தம் ஒன்று.

மற்றொரு சித்தாந்தம், ஆம் ஆத்மியின் சித்தாந்தம். அது என்னவென்றால் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றை வழங்குதல் ஆகும்’ ”

எனக் கூறியுள்ளார்.