டில்லி

ன்று நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி சந்திரயான் லேண்ட ர் ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்த உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில்  உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்து வருகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. அது நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்தது.  அதன் 2019-ம் ஆண்டு நிலவின் தன்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் ‘லேண்டர்’ கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது.

தற்போதும் ‘சந்திரயான்-2’-ல் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. கடந்த மாதம்14-ந்தேதி ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ட்டது.

சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டு இந்த ‘லேண்டர்’, இன்று  மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த இறுதிக்கட்ட செயல்பாடுகளைப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோர் உன்னிப்பாக கவனித்துவருகின்றனர்.

‘சந்திரயான்-2’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி, தற்போதைய ‘லேண்டர்’ கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது, சாதகமான சூழ்நிலையாகக் கருதப்படுகிறது.. இதனால், ‘லேண்டர்’ நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இன்று நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியைக் காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது.  இந்நிகழ்வு மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.