சென்னை

இன்று நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

பல தமிழ் ஆர்வலர்கள் கட்சியின் பெயரில் வெற்றிக்கு அருகில் க் சேர்க்காமல் இருப்பதால் பிழை உள்ளதாக சுட்டுக் காட்டினர்.  இதையொட்டி கட்சியின் பெயரில் க் சேர்க்கப்பட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.

இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் கூட்டம் தொடங்க உள்ளது.

கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாகக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தமிழக வெற்றிக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.