க்னோ

ன்று உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 7 மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய  மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபையில் 403 தொகுதிகள் உள்ளன.   தற்போது இம்மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  இதில் ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று காலை 7 மணி முதல் 7 மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து வருகின்றன.

இன்று 56 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.   இன்றைய தேர்தலில் மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இன்று சுமார் 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.   இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

வரும் 10 ஆம் தேதி அன்று 7 கட்டங்களாகப் பதிவாகும் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இத்துடன் நடந்து முடிந்துள்ள உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநில தேர்தல்களின் பதிவான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று அந்த முடிவுகளும் அன்று வெளியாக உள்ளன.