டில்லி

முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.   இதில் அவர் தனது பதவிக்காலத்தில் பக்குச் சந்தை தொடர்பான பல ரகசிய தகவ்லாக்ளை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்ததாக எழுந்த சர்ச்சை குறிப்பிடத்தக்கதாகும்.   தவிரத் தேசிய பங்குச் சந்தை குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியன் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

ஆனந்த் சுப்ரமணியனுக்கு முன் அனுபவம் இல்லாத நிலையில் அவருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணி நியமனம் செய்ததாகத் தணிக்கை அறிக்கை மூலம் தெரிய வந்தது.   தவிர இந்த இமயமலை சாமியாரே ஆனந்த் சுப்ரமணியன் எனவும் ஒரு சந்தேகம் எழுந்தது.   இதை அடுத்து சித்ரா ராமகிருஷ்ணா விடம் தீவிர விசாரணை நடந்தது.

சித்ரா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை எனப் பலவித நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.  இதற்கு இடையில் விதிமீறல்களில் ஈடுபட்ட சித்ரா, ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேன் உள்ளிட்டோருக்கு செபியால் அபராதம் விதிக்கப்பட்டது.   மேலும் இவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கபட்ட்து.

சித்ரா ராமகிருஷ்ணா தனக்கு முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.  அந்த மனு சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.  எனவே சிபிஐ நேற்று இரவு சித்ரா ராமகிருஷ்ணாவை டில்லியில் கைது செய்துள்ளது.  ஏற்கனவே கடந்த 25 ஆம் தேதி சென்னையில் ஆனந்த் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.