தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம் : ஒரே நாளில் ஒரு லட்சம்

Must read

சென்னை

மிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்  போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை  மிகவும் குறைந்து வரும் வேளையில் தமிழகத்தில் குறையாமல் உள்ளது.   இதையொட்டி தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆயினும் கடந்த இரு நாட்களாகக் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏதும் காணவில்லை.   கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகள் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.  மத்திய அரசிடம் இருந்து தேவையான அளவு தடுப்பூசிகளை பெறுவதிலும் சர்வதேச அளவில் கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

தற்போது அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  இதற்காக அரசு சார்பில் 2,337 முகாம்களும் தனியார் சார்பில் 295 முகாம்களும் நடக்கின்றன.  இன்று ஒரே நாளில் 1,09,679 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது 75,85,298 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி கைவசம் உள்ளன.  இதில் முதல் டோஸ் 56,15,318 மற்றும் இரண்டாம் டோஸ் 19,69,980 எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

 

More articles

Latest article