டில்லி

டில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

டில்லி நகரில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.  இதற்கு முக்கியக் காரணங்களாக வாகனம் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களின் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளைத் தீயிட்டு எரிப்பது எனக் கூறப்படுகிறது.

எனவே டில்லியில் காற்று மாசைக் குறைக்க டில்லி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அம்மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம், “டில்லியில் காற்று மாசு ஏற்படுவதைக்குறைக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சொந்த வாகனத்தைத் தவிர்த்து பொது போக்குவரத்தை நாடினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்.  எனவே வணிக வளாகங்கள் மற்றும் அங்கிக்கரிக்கபட்ட வாகன நிறுத்தங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  பயிர்க் கழிவுகளை பொது இடங்களில் எரிப்பதைக் கண்காணிக்க 500 ரோந்துக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.