சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது. அதன்படி  வரும் 8 மற்றும் 9 ஆகிய  தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் குறித்து அச்சம் எழுந்தது. ஆனால்,  ஊரடங்கு நாட்களில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், வரும்  8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு & ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.032. நாள் 06.012022 இல் ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தினால் ஏற்கனவே 08.01.2022 முப மற்றும் பிப (சனிக்கிழமை) மற்றும் 09.01.2022 முப மற்றும் பிப (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுவதாக இருந்த கீழ்க்கண்ட எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெரும் என தெரிவிக்கப்படுகிறது.