சென்னை:

மிழக பட்ஜெட்டில் பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ்   அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனவும் இதற்காக ரூ. 75.02 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

525 மின்சாரப் பேருந்துகள் வாங்க 960 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பேருந்துகளில் மின்னனு பயணச் சீட்டு முறை கொண்டுவரப்படும்.

பணமில்லாப் பரிவர்த்தனையில் பயணச்சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், தமிழக காவல் துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீயணைப்பு துறைக்கு ரூ.405 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.