சென்னை:

மிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், சேலம் அருகே 2 தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக ‘சிப்காட் தொழிற்பேட்டைகள்’ அமைக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம் தலைவாசலில், கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு மாடுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.