தமிழக பட்ஜெட் 2020-21: எல்ஐசியுடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்!

Must read

சென்னை :

மிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார்.

பட்ஜெட்டில்,  தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தால் அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 8.3 சதவீதமாக இருந்த அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு 2.7 சதவீதமாக குறைந்துள்ளது  என்று தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சிகளில் முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும்,

விரைவில், எல்ஐசியுடன் இணைந்து புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறினார். எல்.ஐ.சி.யுடன் இணைந்து அம்மா விரிவான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article