சென்னை:

மிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 524 பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளின் முக்கிய பணிகள்  சாலை போடுதல், தெரு விளக்கு போடுதல், கழிவு நீர் அகற்றல், குப்பைகளை அகற்றுதல், பொதுகழிப்பறை கட்டுதல், மத்திய மாநில அரசுகளின் திட்டகளை அமல்படுத்துதல் போன்றவைகளாகும்.

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல், மூன்றாண்டு இடைவெளிக்கு நடத்தப்பட்டது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் கவனிப்பாறின்றி கிடந்த பணிகள் அனைத்து முழுவீச்சில் நடக்கும் என்று மக்கள் நம்பியிருந்தார். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் நிதியை பயன்படுத்த, தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) முறையை பயன்படுத்த வேண்டும் என்று புதிய விதியை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த விதியின் படி, கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல், தங்களுக்கு நல்லது செய்வார் என்று தங்களை தேர்வு செய்த மக்களுக்கு, தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் பஞ்சாயத்து தலைவர்கள் வருத்தத்தில் உள்ளனர். இதில் விதிவிலக்காக  சிலர் தங்கள் சொந்த செலவில் சில மேம்பாட்டு பணிகளை செய்து மக்களுக்கு சேவையாற்றி வந்தாலும், எப்போது பஞ்சாயத்துகளுக்கான நிதி முழுமையாக வந்தடையும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையே தொடர்கிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  பஞ்சாயத்து தலைவர்கள் கூறியதாவது,

மதுரை மாவட்டம், சிறுவாலை பஞ்சாயத்து தலைவர் பி. பத்மினிஅம்மாள் தெரிவித்ததாவது: பஞ்சாயத்து நிதி முழுமையாக காலியாக உள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.  இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சில பணிகள்,  அதாவது தண்ணீர் சப்ளை செய்யும் மோட்டார்களை சரி செய்வது போன்ற பணிகளை  எனது சொந்த செலவில் சரி செய்துள்ளேன். பஞ்சாயத்து நிதியை பெற்ற பின்னரே, எங்களால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று உறுதியாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  பெரும்பாலான பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சாயத்து கணக்கு கொண்ட பாஸ்புக்கில், ஒரு லட்சத்துக்கும் குறைவான பணமே உள்ளது. போதுமான பணம் இல்லாத காரணத்தால் அவர்களால் எந்த மேம்பாட்டு பணிகளையும் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சின்னகன்னூர் பஞ்சாயத்து தலைவர் ஆங்குசாமி பேசியதாவது: எனக்கு கொடுக்கப்பட்ட பஞ்சாயத்து வங்கி கணக்கில் ஆறு லட்சம் ரூபாய் இருப்பதாக ஸ்டேட்மென்ட்டில் காட்டுகிறது. ஆனாலும் அந்த பணத்தை எடுத்து பயன்படுத்த முடியவில்லை. இதற்கு அரசு கொண்டு வந்துள்ள புதிய பணம் பரிமாற்ற முறையே காரணமாகும். இருந்தாலும், தற்போது, என் தொகுதியில் தெருவிளக்குகள் மற்றும் தண்ணீர் டேப்களை சரி செய்ய எனது சொந்த பணத்தையே செலவிட்டு வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கொலைவெறிபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் கே.ஆறுச்சாமி தெரிவிக்கையில், எனது தொகுதியில் நான்கு லட்ச ரூபாய் செலவில் சமுதாய கூடம் கட்ட முடிவு செய்துள்ளோம். ஆனால் நிதி இல்லாத காரணத்தால் கட்ட முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். .

கோயம்புத்தூரின் சூலூர் அருகே உள்ள கலங்கல் பஞ்சாயத்து தலைவர் பி. ரங்கநாதன் கூறுகையில்,  தற்போது எங்கள் கிராமத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். மேலும், இந்த கிராமத்தில் நடந்த வருவாய் மற்றும் செலவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு தேவையானவற்றை பட்டியலிட்ட பின்னர், அதற்கான பட்ஜெட் தயார் செய்து, திட்டங்களை செயல்படுத்த அரசிடம் நிதி கோர உள்ளோம் என்றார்.

கோயம்புத்தூரில் உள்ள ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் தெரிவிக்கையில், ஓடந்துறை மேட்டுப்பாளையம் அருகே இருப்பதுடன்,அது நீலகிரி மக்களவை தொகுதி உட்பட்ட கிராமம். இதனால், தான் நீலகிரி திமுக எம்பி ஏ ராஜாவிடம், மேம்பாட்டு பணிகளுக்காக நிதி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.  அவர், குடிநீர் சப்ளை செய்ய தேவையான கட்டமைப்புக்காக  13 லட்சம் ரூபாய் கொடுக்க ஒப்பு கொண்டுள்ளார். இதை தொடர்ந்து ரயில்வே சுரங்க பாதை ஒன்று கட்ட திட்டமிட்டுள்ளோம் அதற்கான நிதியையும் எம்பி இடம் இருந்து கேட்டு பெற உள்ளோம் என்றார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தொகுதியில் உள்ள முக்குடி பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி முத்தையா தெரிவிக்கையில், இதுவரை இங்கு  மேற்கொள்ளப்பட்ட மேப்பாட்டு பணிகளுக்காக எனது சொந்த பணத்தில் 1.75 லட்சம் செலவிட்டுள்ளேன். இருந்த போதும், பஞ்சாயத்துகளுக்கான நிதியை அரசு விரைவில் கொடுக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தேவையான நிதி விரைவில் அளிக்கப்படும் எய்ர்னு தெரிவித்துள்ளார். இந்த நிதி தற்போது நடைபெறு வரும் MGNREGS திட்டத்தின் மூலமே  அளிக்கப்பட உள்ளது. எனவே நாங்கள் விரைவில் கிராம சார்ந்த திட்டங்களுக்கான நிதியை பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்துகளுக்கு கிடைக்கும் வருவாய்

வரி வருவாய்  கிராம் பஞ்சாயத்துகள் வீட்டு வரி, தொழில் வரி போன்றவைகள் மூலம் வருவாய் பெறும்.

வரி அல்லாத வருவாய் கட்டிட கட்ட அனுமதி லைசென்ஸ் வழங்குதல், தண்ணீர் கட்டணம், மீன் பாதுகாப்புக்கான வாடகை, மார்கெட், கண்காட்சிகள், படகுகள், அபராதம் போன்றவைகளால் வருவாய் கிடைக்கும்,.

பகிர்ந்து கொள்ளப்படும் வருவாய் மாநில அளவில் (உள்ளூர் வரி மற்றும் கூடுதல் வரி, முத்திரைத்தாள் கட்டணம், மற்றும் பொழுதுபோக்கு வரி), உள்ளூர் மேம்பாட்டுக்காக கொடுக்கப்படும் நிதி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிதி  போன்றவை

அரசு  நிதிகள் மத்திய நிதி ஆணையம் வழங்கும் நிதி, மாநில பொருளாதார ஆணையம் கொடுக்கும் நிதி, மத்திய அரசால் மேம்பாடு பணிகளுக்காக அளிக்கப்படும் நிதி, மாநில திட்டங்களுகான நிதி.

நிதி இல்லாத சூழலில் பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்படும், அவர்களால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….