சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்க காவல்துறை தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களை நேற்று ஒரே நேரத்தில் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் இதற்கான காரணம் குறித்து சரியான தகவல் இல்லை.

https://twitter.com/chennaipolice_/status/1664166527694934016

இந்த நிலையில் சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் கணக்குகளை முடக்க தமிழக காவல்துறை எந்த புகாரும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை விளக்கமளித்துள்ளது.

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்