சென்னை

மிழக அரசு போக்குவரத்து கழகம் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் மற்றும் அக்னி தீர்த்தம் கடலில் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுடைய திதி, தர்ப்பணம் கொடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாஅகு.

ஆண்டுதோறும் வரக்கூடிய முதல் மூன்று அமாவாசையில் ஒன்றான தை அமாவாசை வரும் 29 -அம் தேதி வருவதால் அன்று பஸ்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்பு ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடிவிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்வார்கள்

எனவே த்மிழக அரசு போக்குவரத்து துறை வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. அதாவது கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.