சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்களில் 89% பேர் ஏற்கனவே உள்ள 69% இடஒதுக்கீட்டின் கீழ் உளதாக தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்ப் நரசிம்ம கோபாலன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் அவர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி இருந்தார். 

இந்த மனுவுக்குத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது . 

அந்த பதிலில்.

”கடந்த 1983 ஆம் வருடம் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இந்த கனக்கெடுப்பு 1982 ஆம் வருடம் உச்சநீதிமன்றம் அளித்த பரிந்துரையின் கிழ் நடத்தப்பட்டது.  2 வருடங்கள் நட்ந்த கணக்கெடுப்பில் கிடைத்த தரவுகளின்படி தைழக மக்களில் 89% பேர் அரசு ஏற்கனவே நடைமுறையில் வைத்துள்ள 59% இடஒதுக்கீட்டின் கீழ் வருகின்றனர்    

மேலும் தமிழக அரசுப்பள்ளிகளில் பயில்வோருக்குக் கூடுதல் இடஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த 10% இட ஒதுக்கீடும் சேர்ந்து அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு அளவை விட அதிகரிக்கும் நிலை உள்ளது. 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தமிழக அரசு மீது இதே 10% பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இடஒதுக்கீடு கோரி உச்சநீத்மன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.