டில்லி

தேசிய மருத்துவ ஆணையம் இந்திய முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ சேர்க்கைகளையும் மையப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் மருத்துவ கல்வியில் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் மையப்படுத்த அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு நடத்தத் தேசிய மருத்துவ ஆணையம் முன் வந்துள்ளது. அதாவது அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி. திட்டமிட்டு உள்ளது.

இதனால் மருத்துவக் கல்வியில் சேர மாணவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்த முடியும் என்றும் என்.எம்.சி. கருதுகிறது.

கடந்த 2-ந் தேதி வெளியான தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பில், ‘

‘நீட்-யுஜி தகுதிப் பட்டியல் அடிப்படையில், இந்தியா முழுவதும் உள்ளஅனைத்து மருத்துவக்கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை பொதுக்கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த பொதுகலந்தாய்வை நடத்த அதிகாரியை மத்தியஅரசு  .எம்.பி.பி.எஸ்.  கல்வி இடங்களை நிரப்புவதற்கான முறையை அரசு முடிவு செய்ய வேண்டும்””

என்று கூறியுள்ளது.

தமிழக அரசு மருத்துவ கல்வி சேர்க்கை ஒழுங்குபடுத்துதல்-2023 விதியின் மூலம் இந்தியா முழுவதும் பொது கலந்தாய்வைக் கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் முயற்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது.