சென்னை: கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 3 மாதத்திற்கு ஊக்கத்தொகை  கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. நோயாளிகளுக் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் புதிதாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பணியாளர்களுக்கு 3 மாதத்திற்கான இன்சென்டிவ் வழங்குவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி,  ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.