சென்னை: சென்னையில் 3நாள் நடைபெற உள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16ந்தேதி தொடங்க உள்ளது. இதில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,  3 நாள் நடைபெற உள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பொங்கல் பண்டிகையைதொடர்ந்து, ஆண்டுதோறும் பிரமாண்ட  புத்தக கண்காட்சி நடைபெறு வருகிறது. இந்த ஆண்டும், தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டுசி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்த ‘புத்த கண்காட்சி  சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, முதன்முறையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில்,.  சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (Chennai International Book Fair – CIBF) 2023 நடை பெறவிருக்கிறது. அதன்படி,  16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சியும்,  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்துகிறது.

இந்நிலையில் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் சென்னையில் 40நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி ! அமைச்சர் அன்பில் மகேஷ்…