சென்னை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்குத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகத் தமிழக ஆளுநருக்கும் ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.  தமிழக ஆளுநர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பல தீர்மானங்களைக் கிடப்பில் போட்டுள்ளதாக திமுகவினர் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.

சமீபத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நாகா இன மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பாரதி நாக இன மக்கள் நாய் மாமிசம் சாப்பிடுபவர்கள் எனச் சொன்னதாகப் பரவிய செய்தியால் கடும் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகையின் ‘எக்ஸ்” சமூக வலைத்தள பக்கத்தில்

 “நாகாலாந்து மக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். திமுகவின் ஆர்.எஸ். பாரதி  ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக அவர்களை இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது.  இந்தியாவே  முழுவதுமே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன்” 

எனப் பதியப்பட்டுள்ளது.