மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இருந்தபோதும் மருந்து கடைகளில் வேலைசெய்பவர்களுக்கு மட்டுமே புரியும் படியான கிறுக்கலான கையெழுத்துகளில் மட்டுமே மருத்துவர்கள் எழுதித் தருகிறார்கள்.
நாள்தோறும் தங்களை நாடி வரும் பலதரப்பட்ட நோயாளிகளை ஒன்றிரண்டு நிமிடம் மட்டுமே பரிசோதித்துவிட்டு இவர்கள் எழுதித் தரும் மருந்துசீட்டுகள் பெரும்பாலான நேரங்களில் ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தை வாழ வைப்பதாற்காகவே உள்ளது.
மருத்துவர் பரிந்துரைத்த அதே ‘ஜெனிரிக்’ மருந்து குறைந்தவிலையில் கிடைக்கும் போதும் மருத்துவர் பரிந்துரைத்தார் என்பதற்காக விலை அதிகமான மருந்துகளையே மருந்து கடைகளில் விற்பனை செய்கின்றனர்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும்’ என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி.ஐ) உத்தரவு இருக்கிறது. ஆனால் அதைப் பெரும்பாலான டாக்டர்கள் பின்பற்றுவதில்லை.
இந்த நிலையைப் மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.