சென்னை

இன்று ஒரே நாளில் தமிழக சட்டசபையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாகும், சட்டசபையில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளித்துப் பேசினர்.

பிறகு, சட்டசபையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 13 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இவற்றில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் மசோதா, இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுவப்படும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின், மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரிவைத் திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 13 சட்ட மசோதாக்கள் இடம் பெற்றிருந்தன.