மேஷம்

வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் வந்தாலும்கூட உடனுக்குடன் இந்த வாரமே சரியாயிடுங்க. கணவர் அல்லது மனைவியின் ஐடியா உங்க முன்னேற்றத்திற்கு யூஸ் ஆகும். இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வெப்பீங்க. இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் வந்த மனசங்கடம் டாடா சொல்லிட்டு ஓடிடும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

ரிஷபம்

வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருந்துட்டீங்கன்னா நோ பிராப்ளம். திடீர் லக் ஒண்ணை எதிர்பார்க்கலாம். மத்தவங்க சொல்ற விமர்சனத்தைக் கண்டுக்காதீங்க. அது பத்திக் கவலைப்படவும் வேணாம். தேவையற்ற வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேணாம். நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனால் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும். அதனால என்ன.. உழைப்புக்கும், முயற்சிக்கும், அலைச்சலுக்கும் ஏற்ற பலன்தான் இருக்கப்போகுதே. உத்தியோகத்துல இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்துல உள்ளவங்களோட ஒத்துழைப்பால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி ஹாப்பி ஆவீங்க. பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மனசங்கடம் ஏற்படலாம்.

மிதுனம்

தவறு செய்யும் ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயிருந்து தள்ளி வந்துடுங்க. நல்லவங்களோட வழிகாட்டுதல் கெடைக்குங்க. பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாதுன்னாலும் நஷ்டம் எதுவும் வராதுங்க. குடும்பத்துல கலகலப்பான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். அதில் ஒரு சின்ன இக்கு இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனசில் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பரபரப்பாய் பிஸியாய் சந்தோஷமா இருப்பீங்க.

 கடகம்

புதிய திட்டமெல்லாம் தீட்டி அதுல வெற்றியும் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரித்தாலும், கவலை வேணாம். அதற்கு ஏற்ற வருமானம் வந்து சந்தோஷப்படுத்தும்.  திட்டமிட்ட பணவரவுகள் சிறிது தாமதமாக வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடிச்ச இடமாற்றம் வரலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார உயர்வு ஏற்படும். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். இட்ஸ் ஓகே தானே? இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீங்க. தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்

சிம்மம்

பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கெடைக்குங்க. பணியில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.  கணவரால்/ மனைவியால் நன்மைகள் நிகழும். உங்களுடைய வருமானம் நன்கு உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? இந்த வாரம் ஹாப்பியா டூயட் பாடுவீங்க. திருமணம் ஆனவர்களும் ஹனி மூன் முடிச்சவங்களும் அடுத்த ஹனி மூனுக்குத் தயாராயிடுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்துல இதமான சூழ்நிலை நிலவும். குடும்பத்துல இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். பழைய நண்பர்களைச் சந்திச்சுப் பேசி சந்தோஷப்படுவீங்க. தன்னம்பிக்கை இன்கிரீஸ் ஆகும்.

கன்னி

வீட்டில் உற்சாக சூழல் நிலவும். பேச்சினால் பிரச்னைங்கள்ல மாட்டாமல் இருக்கப் பாருங்க. அக்கம்பக்கத்தினருடன் இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாத்துவீங்க. வேலையை விடலாம்னு நினைக்கவே நினைக்காதீங்க. கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க. நீங்க வெளியே வந்தால் உள்ளே முண்டியடிச்சு நுழைய நூறு பேர் காத்திருக்காங்க. விமானத்தில் பறக்கப்போறீங்க. கார் வாங்கப் போறீங்க. கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீங்க. அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். செலவுகள் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கும். ஆனா அதனாலெ கெடைக்கப்போற சந்தோஷத்தோட ஒப்பிட்டா அது நத்திங்.

துலாம்

பணவரவு திருப்தி தரும். அடுத்தவங்களோட பிரச்னைங்கள்ல தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்ல சுபகாரியங்கள் நடக்கலாம். மேரேஜ் முயற்சிகள் கைகூடும்.துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளும் வாரம். எதிர்பாராத மகிழ்ச்சியான விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப் போகுதுங்க. செலவு பாட்டுக்கு சுனாமி கணக்கா உங்களை விழுங்கிகிட்டிருந்தாலும் அதற்கெல்லாம் அசந்து போறவங்களா நீங்க! இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருந்த நிலைமை மாறி நிம்மதியாத் தூக்கம் வரும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. மம்மி டாடி ஆதரவா இருப்பாங்க.

விருச்சிகம்

தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீங்க. லோன் போட்டுக் காத்திருந்தா அது பற்றி இந்த வாரம் நல்ல நியூஸ் வரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குதுங்க. சக நண்பருங்க ஹெல்ப் செய்வாங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்துவாங்க. குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவாங்க. குடும்பத்துல அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீங்க. பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த ஃபைட்டிங் முடிஞ்சு சந்தோஷமாப் பேசிக்குவீங்க.

தனுசு

உழைப்புக்கேற்ற பலன் அடைவீங்க. மனசுல இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி நிலவ ஃப்ரெண்ட்ஸ்லாம் உதவுவாங்க. ஸ்டூடன்ட்ஸ் ரொம்பவும் அதிக முயற்சியுடன் கவனத்தைக் குவிக்க வேண்டி யிருக்கும். பேசுவதற்கு வாயைத் திறக்குமுன் ரெண்டு முறை யோசிச்சுக்குங்க. அதையும் விட பெட்ர் என்ன தெரியுமா? சைலன்ட் மோட்ல இருந்துடுங்க. உங்க கணவர் (அல்லது அல்லது மனைவி) நிறைய நன்மைகள் அடையப் போகிறார். பார்த்துப் பெருமிதப்படப்போறீங்க. இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் லாபமும் நன்மையும் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

மகரம்

அலட்சியமின்றிச் செயல்படுவது நல்லது. தொழில் பிஸினஸில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த லோன் வசதி கிடைப்பதில் துரிதமான பலன் இருக்கும்.  பணியாளர்கள் கொஞ்சம் கவனமாய்ப் பணிகளை கவனிப்பது நல்லது. என்னது? வேலை பிடிக்காமல் கம்பெனியில் பேப்பர் போடப்போறீங்களா? இப்பவா? நோ…நோ. இன்னும் கொஞ்சம் பொறுமை.  வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆகவே சற்று சோம்பலைப் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்து பிசினஸ்ஸை கவனிங்க. ப்ளீஸ், இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எதுவுமே நிதானமாய்த்தான் நடக்கும். ஆனால் ஃபைனல்  வெற்றி உங்களுக்குத்தான். ஹாப்பியா?

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

கும்பம்

முன்னேற்றத்துக்கான முயற்சிகள் லாபம் தரும். பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றி நல்ல பலனைப் பெறுவீங்க. திட்டம் எதுவாச்சும் போட்டிருந்தீங்கன்னா அது நல்லபடியா நிறைவேறுங்க. பெண்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வரப்போகுது. மனசை அதுக்கு ஹாப்பியா தயார் செய்துக்குங்க. யோகமான வாரம்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீங்க. தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். குழந்தைகங்களோடயும் அவங்களோட குழந்தைங்களோடயும் சந்தோஷமா இருப்பீங்க. கல்யாணமாகாதவங்களுக்குக் கல்யாணமும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அந்த பாக்கியமும் கெடைக்கப்போகுது.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

மீனம்

ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் ரொம்பவே கவனமா இருங்க. குடும்பத்துல நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். மன வருத்தத்தில் விலகிய ரிலேடிவ்ஸ்ஸும் ஃப்ரெண்ட்ஸும் மறுபடியும் வந்து சேருவாங்க. கணவன், மனைவிக்கிடைல  சந்தோஷமான உறவு இருக்கும். பிள்ளைங்க, கல்வியில் மேன்மை அடைவது பற்றித் தீவிரமாக முனைவாங்க. குழந்தை உங்களை சந்தோஷப்படுத்தப்போறாங்க. வழிபடும் இடங்களுக்குப் போவீங்க. அந்த இடத்தில் உங்க வாழ்க்கையைத் திசை திருப்பும் நன்மை ஒன்று நடக்கப் போகுது. யாரையேனும் சந்திக்கக்கூடும். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். இது வரை சந்திக்காத புதிய முகமாக அவர் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. மத்தவங்களோட வெவகாலத்துல தலையிடாம இருக்கறது ரொம்பவே நல்லது. பணத்தைக் கையாளும்போது மிகுந்த கேர்ஃபுலா இருங்க. நிறைய வருமானம் வரும். செலவுகளும் குறையும்.ஸோ.. சேமிப்பு இன்கிரீஸ் ஆகும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.