டில்லி,

த்திய அரசின் உதய் மின்திட்டத்தில் இணைந்து கையெழுத்திட்டது தமிழக அரசு.

மத்திய அரசு கொண்டு வந்த உதய் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் சேர்ந்துள்ளது. மின்சீரமைப்பு திட்டமான உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது

டெல்லியில் இன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டத்தில் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பல்வேறு மாநில அரசு களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவரும் திட்டமான உதய் மின் திட்டத்திற்கு தமிழக அரசின் முதல்வராக ஜெயலலிதா இருந்தவரை ஒப்புதல் கொடுக்காமல் தவிர்த்து வந்தார்.

ஆனால், அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே மத்திய அரசு தனது அதிகாரத்தினால் தமிழகத்தை இணைய வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு  ரூ.11,000 கோடி வரை பயன் கிடைக்கும் என்றும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்,தமிழகத்தின் கோரிக்கைகளான  3 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் உயத்துதல் கூடாது,   நிதி பத்திர முடிவு காலம் 15 ஆண்டுகளாக இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதய் திட்டத்தில் இணைந்தால் அடுத்த 3 ஆண்டுகளில் மின் விநியோக நிறுவனங்களின் கடன் சுமையை நீக்க வழி ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

உதய் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது,

ஒவ்வொரு நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகை யில் உதய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்களைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதய் திட்டத்தில் நுகர்வோரை பாதிக்கும் ஒரு சிறிய அம்சம்கூட இடம்பெறவில்லை. அதேசமயம் நுகர்வோரின் ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி மக்கள் பணத்தை சேமிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.