சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு

Must read

சென்னை: சிகிச்சையின்போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி  உள்ளார்.

தமிழ்நாடு கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆனால், மாநில அரசு உயிரிழப்புகளை வெகுவாக குறைத்து காண்பித்து வருவதாக சர்ச்சை தொடர்கறிது. கொரோனா என கூறி சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை பலனின்றி சிலர் இறக்கும்போது, அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கிறது. மேலும், இறந்தவர்களின் உறவினர்களிடம் உடனே உடலை தகனம் செய்யும் என மருத்துவமனை ஊழியர்களும், காவல்துறையினரும் வலியுறுத்தி, தகனம் செய்ய வைக்கின்றனர். இது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், கொரோனா  சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின்,  பெயர், வயது , ஊர் உள்பட அனைத்து விவரங்களையும் சரியான முறையில்  இணையதளத்தில்  பதிவேற்றுவதை உறுதி செய்யுமாறும், கொரோனாவால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

 

More articles

Latest article