டில்லி

மிழக முன்னாள் டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பிராஜ் கிஷோர் ரவி  தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஆவார். தாம் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதம் முன்பே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.  அப்போதே அவர் காங்கிரசில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின

நேற்று பிராஜ் கிஷோர் ரவி நேற்று காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த இணைப்பு நிகழ்வு டில்லியில் உள்ள கட்சி தேசிய அலுவலகத்தில் காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சையத் நசீர் உசேன் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகிலேஷ் பிரசாத்சிங் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

தாம் காங்கிரசில் இணைந்தது குறித்து பிராஜ் கிஷோர் ,

“காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் என்பதால் எனது ரத்தத்திலேயே அது ஊறிப்போய் இருக்கிறது.  என்னுடைய அரசியல் பிரவேசம் தேசிய அளவில் இருக்கும். பீகாரிலும் இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடக் கட்சி வாய்ப்பு அளிக்கும்” 

என்று தெரிவித்துள்ளார்.