திருப்பூரில் உள்ள சாய பட்டறை தெருவைச் சேர்ந்த பெண்களின் ஆதார் மற்றும் பான் கார்ட் விவரங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்ய போலி ஜிஎஸ்டி சான்றிதழ் பெறப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்த இந்த பகுதியைச் சேர்ந்த பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் மேல்முறையீடு செய்ததில் இந்த பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆதார் மற்றும் பான் கார்ட் எண்களை பயன்படுத்தி போலி ஜிஎஸ்டி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆவணங்களை சரிபார்க்காமல் அதிகாரிகள் ஜிஎஸ்டி சான்றிதழ் எவ்வாறு வழங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.