பிரதமரை சந்திக்க தமிழக முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றார்!

Must read

 
டெல்லி,
தமிழக முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு தமிழக அரசு இல்லத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகமுதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றார். இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து முதன்முறையாக டெல்லி செல்கிறார்.
தமிழகத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்  பலத்த சேதமடைந்தன.  பெரும்பாலான இடங்களில்  மின் கம்பங்கள்,  மின்சார டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை சாய்ந்ததால் நகரமே இருளில் மூழ்கியது.  தொலைத் தொடர்பு  சேவையும் முற்றிலுமாக முடங்கியது.
ஆயிரக்கணக்கில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போதுதான் நிலமை ஓரளவுக்கு சீராகி வருகிறது.
 

 
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது. மின்கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்களை சீரமைக்கும் பணியில்  மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து நிவாரணம் பெற பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டடார்.
அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பிரதமரிடம் கேட்க வேண்டிய நிவாரண பணிகளுக்கான தொகை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று காலை டெல்லி சென்ற தமிழக முதல்வருடன் தலைமை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
டெல்லி சென்றடைந்த முதல்வர் அங்கு அதிமுக எம்.பியும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை மற்றும் உயர் அதிகாரிகளுடன்யு  ஆலோசனை நடத்தினார்.
இன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

OPS to meet PM and seeks relief for Cyclone affected parts of TN.
 
 
அப்போது, வர்தா  புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம்  தமிழக முதல்வர் கொடுத்து, அதற்கான நிவாரணம் வழங்க வலியுறுத்த இருக்கிறார். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும்,  பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா வுக்கு  முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமும் கொடுக்க உள்ளார்.
பிரதமரை சந்தித்ததும், இன்று இரவே ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார்.

More articles

Latest article