தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை சாலையில் இன்று தனது விண்டேஜ் ஃபியட் காரை ஒட்டி மகிழ்ந்தார்.

விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவோர் அதிகரித்து வரும் சூழலில் ஒருசில பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த கார்கள் எத்தனை ஆண்டுகள் பழமையாக ஆனாலும் அதனை பராமரித்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் பராமரித்து வந்த தனது பழமையான ஃபியட் காரை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அவரே ஒட்டிச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.