சோச்சி, ரஷ்யா

ஷ்ய நாட்டில் நடைபெறும் செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய சிறுவன் பிரக்னானந்தா சாதனை புரிந்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை எஃப் ஐ டி இ உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெறுகிறது.   இந்த போட்டிக்கு இந்தியா சாரில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 15 வயதான சிறுவன் பிரக்னானந்தாவும் ஒருவர் ஆவார்.  இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த போட்டியில் 2 ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனிய நாட்டை சேர்ந்த காப்ரியல் சர்கிசியன் கலந்து கொண்டார்.   தற்போது 37 வயதாகும் இவர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.  இவருடன் தமிழக சிறுவனான 15 வயதாகும் பிரக்னானந்தா போட்டியிட்டர்.

இந்த போட்டியில் பிரக்னானந்தா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.     ஏற்கனவே சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களில் 5ஆவது சிறுவன் என்னும் சாதனையையும் இவர் படைத்துள்ளார்.  இவர் 7 வயதில் இருந்தே பல செஸ் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.