டென்மார்க் நாட்டின் ப்ளோக்ஹஸ் நகரில் கட்டப்பட்டுள்ள 21.16 மீ உயரம் கொண்ட கோட்டை வடிவிலான மணல் சிற்பம் உலகின் மிக உயரமான மணல் சிற்பமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன் ஜெர்மனியில் அரண்மனை வடிவில் கட்டப்பட்ட மணல் சிற்பம் தான் மிக உயர்ந்த சிற்பமாக இருந்துவந்தது, தற்போது டென்மார்க்கில் செய்யப்பட்டுள்ள இந்த சிற்பம் இதை விட 3 மீ உயரம் அதிகமானதாக உள்ளது.

வில்பிரட் ஸ்டிஜ்கெர் என்ற டச்சுக் கலைஞரால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் உயரம் 69.4 அடி இதன் எடை 5000 டன்.

4860 டன் மணல் கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த சிற்பத்தில் 10 சதவீதம் களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேல்பூச்சுக்கு கோந்து கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த சிற்பம் பிரமிட் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காற்றையும் குளிரையும் தாங்கி நிற்கும் இந்த சிற்பம், 2022 பிப்ரவரி – மார்ச் மாதம் பனிப் பொழிவு காலம் வரை உருக்குலையாமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.