தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் – தேர்தல் ஆணையம் முடிவு

Must read

சென்னை:
மிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடந்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் தற்போதைய 5 ஆண்டு பதவிகாலம் வருகிற மே 21ல் முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி நடத்தி வருகின்றன. இந்நிலையில் எனவே அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article