சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்  இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்தார். திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் விவரங்கள்:

4,773 குளங்கள், ஊரணிகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு

14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு

சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம், 12.500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம்!

‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு..

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் – 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்..

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு..

பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு. பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு

வேளாண் பட்ஜெட் தொடர்பான முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…

TN Govt Farm Budger – Page Tamil 1-25 Patrikai dot com