சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்  இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்தார். திமுக அரசு 4வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு..

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு..

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு..

ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் பட்ஜெட் தொடர்பான முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…

TN Govt Farm Budger – Page Tamil 1-25 Patrikai dot com