சென்னை

திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்று அக்கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.

வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.  ஆனால் அக்கட்சிக்கு இதுவரை தொகுதி பங்கீடு நடைபெறவில்லை.   சமிபிபத்தில் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையாக அக்கட்சி தலைவர் ஜிகே வாசன் உடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி பேச்சு வார்த்தை நடத்திய போதே ஒரு முடிவு ஏற்படும் என பலரும் நம்பினர்.

ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து அதன் பிறகு அமைசர் தங்கமணியுடன் நேற்று நான்காம் கட்ட பேச்சு வார்த்தை நடநதது.  ஆனால் இதிலும் எவ்வித உடன்பாடும் எட்டாமல் உள்ளது.  நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஈரோடு கிழக்கு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கபடாததால் அந்த தொகுதிகள் தமாகா வுக்கு ஒதுக்கப்ப்டலாம் என கூறப்படுகிறது.

ஆனால் தமாகா தரப்பில் மேலும் இரு தொகுதிகளாக வால்பாறை மற்றும் காங்கேயம் தொகுதிகளையும் கேட்டுள்ள போதிலும் அதிமுக இந்த தொகுதிகளுக்கு தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  இதையொட்டி தமாகா கட்சி அவசர ஆலோசனைக் கூடம் ஒன்றை இன்று காலை 10 மணிக்கு நடத்த உள்ளது.   அப்போது தமாகா முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெர்ரிய வந்துள்ளது.