சென்னை

ட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுவுடன் வேட்பாளரின் சமூக வலைத்தள கணக்குகள் குறித்த  விவரம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.   இதற்கான வேட்பு மனு படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வங்கிச் செல்கின்றனர்.   மேலும் தேர்தல் செலவு கணக்குகளுக்காக புதிய வங்கிக் கணக்கு துவங்கும் நடவடிக்கைகளையும் செய்யத் தொடங்கி உள்ளனர்.

தற்போது பெரும்பாலான வேட்பாளர்கள் சமூக வலைத் தளங்களான முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்றவை மூலம் தேர்தல் பிரசாரம் நடத்தி வருகின்றனர்.    எனவே வேட்புமனு தாக்கல் செய்யும் போது அளிக்கும் படிவம் 25 உறுதிமொழி பத்திரத்தில் சமுக வலைத் தள கணக்குகள் குறித்த விவரங்களும் அளிக்க வேண்டி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்துத் தேர்தல் அதிகாரிகள், ”வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்யும் போது அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சி வேட்பாளருக்குத் தொகுதியில் உள்ள ஒரு வாக்காளர் முன் மொழிதல் வேண்டும்.  பிற வேட்பாளர்க்கு 10 வேட்பாளர்கள் முன் மொழிய வேண்டும்.   அத்துடன் வேட்பு மனுவுடன் உள்ள உறுதிமொழி படிவத்தில் கேட்டுள்ளபடி சமூக வலைத் தள கணக்குகள் விவரங்களை அவசியம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.