திருவொற்றியூர் வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா நேற்று மாலை விநாயகர் பூஜையுடன் துவங்கியது.

இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நாளை (16-2-2024) காலை சூரிய பிரபை வாகனத்திலும் மாலை சந்திர பிரபை வாகனத்திலும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-2-2024 (புதன் கிழமை) காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

இதைத் தொடர்ந்து 23ம் தேதி காலை திருக்கல்யாண உற்சகவமும் பிற்பகல் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலமும் நடைபெற உள்ளது.