சென்னை:

10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்க்கவும் என பஸ் கண்டர்களுக்கு உத்தரவிட்ட போக்குவரத்து துறை அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் திருப்பூர் கிளை போக்குரத்து மேலாளர் பேருந்து நடத்துனர்களின் கவனத்திற்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதன் நகல் பஸ் டிப்போவிலும் ஒட்டப்பட்டிருந்தது. அதில் , “நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும் போது பயணிகள் கொடுக்கும் ரூ.10 நாணங்களை முடிந்த வரை தவிர்க்கவும்.தவறும் பட்சத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும் போது ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடனத்துனர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை வட்டாரங்களில்  அரசு டவுன் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை பயணிகள் கொடுத்தால், அது செல்லாது என்று கண்டக்டர்கள் வாங்க மறுத்து வகிகின்றனர்.  இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிலசமயம் வாக்குவாதம் முற்றி தகராறு வரை சென்றது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் கிளம்பியது.

இந்த நிலையில், பத்து ரூபாய் நாணயம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது திருப்பூர் கிளை மேலாளர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் நடவடிக்கை எடுத்துள்ளார்.