ஜேஎன்யூ முத்துகிருஷ்ணன் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி!

Must read

சென்னை,

டில்லியில் தற்கொலை செய்துகொண்ட ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திங்கள்கிழமை  அன்று டில்லியில் உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் உடல் பிரேதப் பரிசோத னைக்குப் பிறகு நேற்று அவரது  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து டில்லி யில் இருந்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு‌வரப்பட்டது.

விமான நிலையத்தில்  மத்திய ‌இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து  தமிழ்‌நாடு காங்கி‌ஸ்‌ கமிட்டி தலை‌வர் திரு‌நாவுக்க‌‌‌ர‌சர், விடு‌லை‌ சிறுத்தை‌கள்‌ கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு ‌அஞ்சலி‌ செலுத்தி னர்.

அதன்பின் முத்துகிருஷ்ணனின் உடல் அவரது  சொந்த ஊரான சேலம்‌ மா‌வட்டம் சாமிநாத புரத்திற்கு முத்துகிருஷ்ணன் ‌உடல்‌ எடுத்துச் செல்லப்பட்டது.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் சம்பத், முத்துக்கிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

More articles

Latest article