சிந்த்வாரா:
‘திரங்கா யாத்திரை’  எனப்படும்  ‘மூவர்ணா யாத்திரை’  பொதுக்கூட்டத்தில் பேசிய ஜவடேகர்,   நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித ஜவகர்லால் நேரு போன்றோரும் , தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பகத் சிங் மற்றும் ராஜ்குரு ஆகிய அனைவருமே தியாகிகள்தான் என்று குறிப்பிட்டார்.
ந்தியாவின் 70-வது சுதந்திரதின கொண்டாட்டங்களையொட்டி பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி பா.ஜ.க தலைவர்கள் மூவர்ண யாத்திரை (திரங்கா யாத்திரை) மேற்கொண்டு வருகின்றனர்.
prakashe
அதன் ஒரு பகுதியாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா நகரில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்.
நிகழ்சியில் அவர் பேசும்போது. 1857-ஆம் ஆண்டு தொடங்கிய இந்திய சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவிலிருந்து தூக்கி எறியும் வரை 90 ஆண்டுகள் தொடர்ந்தது. நாட்டுக்காக போராடிய அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித ஜவகர்லால் நேரு போன்றோரும் , தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பகத் சிங் மற்றும் ராஜ்குரு ஆகிய அனைவருமே தியாகிகள்தான் என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே அவர் தூக்கிலிடப்பட்ட தியாகிகளின் வரிசையில் நேரு மற்றும் நேதாஜியையும் சேர்த்து சொன்னதாக புரிந்துகொள்ளப்பட்டு சமூக வலைதளங்களில் பலர் அமைச்சரின் வரலாற்று அறிவை விமர்ச்சிக்கத் தொடங்கினர்.
அவர்களுக்கு அமைச்சர்  ஜவடேகர் தமது ட்விட்டர் செய்தி ஒன்றின் மூலம் பதில் அளித்து தமது கருத்தை தெளிவுபடுத்தினார்.