சாலை விபத்து: தமிழகம் முதலிடம்!

Must read

 
புதுடெல்லி:
ந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிம் வகிப்பதாக மத்தியஅமைச்சர் தெரிவித்து உள்ளார்.
nitin
இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், தொற்றுநோய், ஜாதி மதக்கலவரங்ள் இவற்றை விட   பொதுமக்களின் உயிரைக் அதிகமாக காவு வாங்குவது சாலை விபத்துகள்.
இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த  புள்ளிவிபரத்தை மத்திய சாலை மற்றும் கப்பல்  போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியச் சாலைகளில் ஒரு மணி நேரத்துக்கு 17 விபத்துகள் என்ற கணக்கில் ஒருநாளைக்கு 400 விபத்துகள் நடைபெறு கின்றன.
road-2
ஒவ்வொரு வருடமும் ஏற்படும் சுமார் ஐந்து லட்சம் சாலை விபத்து களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
இதில் உயிரிழப்ப வர்கள் பெரும்பாலும் 15-லிருந்து 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஓட்டுநர்களின் கவனக்குறைவால் 77 சதவீத விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
5 லட்சம் விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்த தவறால் நிகழ்ந்தவை.
மாநில அளவில் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
2015ல் தமிழகத்தில்  நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 79,746 பேர் காயம் அடைந்தனர்.
நகரங்களில் மும்பை முதலிடத்திலும், விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதத்தைப் பொறுத்தமட்டில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்தப் புள்ளி விபரம் தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது, விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க தொடர்ந்து அரசு தீவிர முயற்சியில் ஈடுபடும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்வீடன் நாட்டில் ஒரு வருடத்துக்கு ஒரு விபத்து மட்டுமே நடக்கிறது. உலகெங்கும் சாலை விபத்து குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு விபத்துகளின் விகிதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்தியாவில் நிலமை இன்னும் மோசமாக இருப்பதையும் நாம் ஆண்டு தோறும் விலைமதிப்பற்ற பல உயிர்களை அதிலும் குறிப்பாக இளஞர்களின் உயிர்களை இழந்து வருகிறோம் என்றும் அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

More articles

Latest article