துரை

ந்த ஆண்டின் சித்திரைத் திருவிழாவின் நிகழ்ச்சி நிரலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஆண்டு தோறும் மதுரையில் சித்திரை மாதம் அமாவாசை முடிந்த பிறகு கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்கும். இது தென் தமிழகத்தில் நடைபெறும் மிகவும் தொன்மையான விழாவாக உள்ளது. இந்த ஆண்டில் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஏப்ரல் 23ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் நிறைவு பெறுகிறது.

பத்தாவது நாளில், திருவிழாவின் பிரதான நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குத் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நிகழும் இரண்டு வாரங்களும் மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும். அத்துடன் மதுரை சித்திரைத் திருவிழா காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.  சித்திரைத் திருவிழா காண இந்த ஆண்டிலும் வழக்கம்போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை திருவிழாவின் மொத்த நிகழ்வுகள்

  • ஏப்ரல் 12 – சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  • ஏப்ரல் 13 – காலை 7 முதல் 9.30 வரை தங்க சப்பர நிகழ்வு. மாலை 7 முதல் 10.30 வரை பூதம், அன்னம் வாகனம்
  • ஏப்ரல் 14 – காலை 7 முதல் 9.30 வரை தங்க சப்பர நிகழ்வு. மாலை 7 முதல் 10.30 வரை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
  • ஏப்ரல் 15 – காலை, மாலை தங்க பல்லாக்கு
  • ஏப்ரல் 16 – காலை தங்க சப்பரம், மாலை தங்க குதிரை நிகழ்வு
  • ஏப்ரல் 17 – தங்க சப்பரம், தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனம்
  • ஏப்ரல் 18 – தங்க சப்பரம், நந்திகேஸ்வரர் யாளி நிகழ்வு
  • ஏப்ரல் 19 – காலை தங்க பல்லாக்கு, மாலை வெள்ளி சிம்மாசனம்
  • ஏப்ரல் 20 – மரவர்ண சப்பரம், இந்திர விமானம்
  • ஏப்ரல் 21 – வெள்ளி சிம்மாசனம், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு
  • ஏப்ரல் 22 – திருத்தேர் வடம்பிடித்தல், சப்தாவர்ண சப்பரம்
  • ஏப்ரல் 22 – கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வு 
  • ஏப்ரல் 23 – சித்திரை திருவிழா நிறைவு
  • ஏரல் 23 – கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்