டெல்லி :

ந்தியாவின் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, டிக்-டாக் நிறுவனம் 400,000 மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முககவசங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு டிக்-டாக் தனது பங்களிப்பாக இந்த நன்கொடையை வழங்கி இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் கூறி இருக்கிறது.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவோடு, நிர்ணயிக்கப்பட்ட தரங்களையும் வழிகாட்டுதல்களையும் பூர்த்தி செய்யும் இந்த அத்தியாவசிய மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படுவதாக கூறி இருக்கிறது.

COVID-19 பரவுவதற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தற்காப்பு நடவடிக்கையாக குடிமக்கள் சமூக தூரத்தை கடைப்பிடிப்பதும், வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மருத்துவ பணியாளர்கள் நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க அயராது உழைத்து வருகின்றனர். இதன் விளைவாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதால், இது போன்ற நேரங்களில், அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த உதவியை வழங்கி இருப்பதாக டிக் டாக் நிறுவனம் கூறியிருக்கிறது.

இவை தவிர, கூடுதலாக, உள்ளூர் / மாநில அளவிலான மருத்துவ ஊழியர்களுக்கு 200,000 முககவசங்களை டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது, என்று இந்த செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.