டெல்லி:

நாடு முழுவதும் உள்ள 90 லட்சம் ஏழைகளுக்கு 90 லட்சம்  இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மேலாளர் தெரிவித்து உள்ளர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  கச்சா எண்ணை மற்றும் எரிவாயு விலைகள் குறைந்து வருகின்றன. இந்தியாவிலும் கடந்த மாதம் முதல் எரிவாயு விலை குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் பொதுமேலாளர் சிதம்பரம், நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலசவமாக வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், மாதம் ஒன்றுக்கு 30 லட்சம் வீதம்  90 லட்சம் ஏழைகளுக்கு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தவர், இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரை இலவச சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.