கமலஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படம் KH234 இதன் டைட்டில் லுக் மற்றும் டீசர் இன்று வெளியானது.

ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்திருக்கிறார்.*

ராஜ்கமல் பிலிமில் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் கமலுடன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘தக் லைப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.*