a
சென்னை: சென்னை எழும்பூரில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த பெண் மருத்துவர் ரோகினி பிரேம் குமாரி (64) தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டில் ரோகினி பிரேம் குமாரி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து  விசாரணை நடத்த எழும்பூர் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில் மூன்று  தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  விசாரணையில் சிறுவன் ஒருவன் உள்பட ஹரி, ராஜா ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  விசாரணையில், இவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் ரோகினி பிரேம்குமாரி வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய வந்தது  தெரிய வந்தது.
மூவரும் ரோகினி பிரேம்குமாரி வீட்டிற்கு ஏழாம் தேதி இரவு திருட வந்துள்ளனர். அப்போது நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ரோகினி பிரேம்குமாரி வெளியே வந்திருக்கிறார். அப்போது ரோகினி பிரேம்குமாரியை கை மற்றும் வாயை கட்டி கொலை செய்து வீட்டின் ஓரமாக போட்டு இவர்கள் ஓடிவிட்டனர்.   மேலும் செல்போன், கம்மல், செயின், பர்ஸ் உள்ளிட்டவைகளையும்  கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.