பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது 

Must read

சிவகங்கை: 
ழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி தன்னுடைய வகுப்புத் தோழி மூலமாக அறிமுகமான அழகு நிலையத்திற்கு கண்புருவத்தை திருத்துவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பொறுப்பாளருடன் நட்பு ரீதியாகப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தேவகோட்டையை சேர்ந்த மணிமாறன், லெட்சுமி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article