பள்ளி மற்றும் கல்லூரி போலிச்சான்றிதழ் விற்பனை : மூவர் கைது

Must read

டில்லி

போலியான பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களை தயாரித்து விற்ற மூவர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் போலியான பள்ளி மற்றும் கல்விச் சான்றிதழ்களைக் கொண்டு பணியில் சேரவும், மேற்படிப்புக்கும் பலர் முயலுவதாக டில்லி காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.  அதை ஒட்டி காவல்துறையினர் விசாரணையின் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் போலியான பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை தயாரித்து விற்பது கண்டறியப்பட்டுள்ளது.    இந்த விவகாரத்தில் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.  அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் வேறு யாருக்கும் சம்மந்தம் இருக்கலாம் என போலிசார் ஐயம் கொண்டுள்ளனர்.   கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

More articles

Latest article