திருச்சூர்

பிரபல நடனக்கலைஞரும் நடிகருமான கலாமண்டலம் கீதானந்தன் மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார்.

கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்று ஒட்டன்துள்ளல்  ஆகும்.  இந்த கவிதை நயம் மிக்க நடனக்கலை கி பி இரண்டாம் நூறாண்டில் இருந்து ஆடப்பட்டு வருகிறது.   மிருதங்கத்தை பக்க வாத்தியமாக வைத்து நிகழ்த்தப்படும் இந்த நடனம் கேரள மக்களிடையே இன்றும் பிரபலமாக இருந்து வருகிறது.

கேரளாவின் கலை அமைப்பான கலாமண்டலத்தில் இந்த நடனத்த்துக்கு தனிப் பிரிவு உள்ளது.  இந்தப் பிரிவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர் ஓட்டன்துள்ளல் நடனக் கலைஞர் கலாமண்டலம் கீதானந்தன் (வயது 58) ஆவார்.   இவர் பல மேடை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தி வந்துள்ளார்.  பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர்.

நேற்று திருச்சூர் அருகே உள்ள அவிட்டத்தூர் மகாவிஷ்ணு ஆலயத்தில்  நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார்.  இரவு சுமார் 8 மணிக்கு மேடையில் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.   முதல் உதவிச் சிகிச்சைக்கு பின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.   ஆயினும் அவர் மரணம் அடைந்துள்ளார்.

கேரளாவின் கலைஞர்களும் பொதுமக்களும் கலாமண்டலம் கீதானந்தன் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

[youtube https://www.youtube.com/watch?v=SmMrFEeK9Zo]