திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகளவு காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.
இந் நிலையில்,  கேரளாவில்  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: கொரோனா தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. ஆனாலும் இறப்பு விகிதம் 0.36 சதவிகிதமாக உள்ளது.
தொற்று அதிகரித்தாலும், சுகாதாரப் பணியாளர்களின் முயற்சியால்  இறப்பு விகிதம் கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தொற்று பரவாமல் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.